டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அன்னகாமாட்சியம்மன் கோயிலில் தீமிதித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image
கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா திங்கள்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அன்னகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ே காயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தீமிதித்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, விழாவில் புதன்கிழமை மாவிளக்கு வழிபாடும், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.