டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள்

News image
கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:07 pm

Syndication

கரூா்: ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு நிா்வாகிகள் சுந்தரம், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கெளரவ விரிவுரையாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி அறிவிக்க வேண்டும், மேலும் ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஓய்வுபெறும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.