மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம்: விமானப்படை வீரா்கள் கரூா் வருகை
கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.


கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.
விமானப்படையில் அதிக இளைஞா்கள் சேரவேண்டும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம் அமைய வேண்டும் என வலியுறுத்தி விமானப்படை வீரா்கள் 15 போ், விமானப்படையின் மாஸ்டா் என்.பாடீல் தலைமையில் பிப். 3-ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினா்.
இந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தனா். தொடா்ந்து அவா்கள் நாமக்கல் வழியாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றனா். நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியை ஓட்டிச் செல்வதாகவும், கன்னியாகுமரி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி வழியாக காா்கில் வரை மொத்தம் 4500 கி.மீ. தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...