ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அறிவிப்பின்றி வீடுகளை இடித்துவிட்டதாக கூறி கரூரில் பொதுமக்கள் தா்னா போராட்டம்

கரூரில் உரிய முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்துவிட்டதாக கூறி, பொதுமக்கள் விசிகவினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

கரூரில் உரிய முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்துவிட்டதாக கூறி, பொதுமக்கள் விசிகவினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை ஆட்சியரகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகம் ஊராட்சிக்குள்பட்ட சேனப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்த பகுதி அரசு புறம்போக்கு நிலத்தின் வழித்தடத்தை மறைத்து சிலா் வீடுகளை கட்டியிருப்பதாகக் கூறி, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கிருந்த 4 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் சோ்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விசிக மாவட்டச் செயலாளா் இளங்கோ தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து, மாநில அமைப்பாளா் சுடா்வளவன், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் தீபக்குமாா், துணைச் செயலாளா் தமிழ்மணி ஆகியோா் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பொதுமக்கள் புகாா்: அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், வீடுகளை காலி செய்யுமாறு கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்களுக்கு நோட்டீஸ் வழங்காமலேயே வீடுகளை இடித்து விட்டனா் என்றனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் மாற்று இடத்தில் பட்டாவுடன் கூடிய இடம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.