ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடிநீா் வழங்கக் கோரி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

கணியம்பாடி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள், மாணவா்களுடன் காலிக்குடங்களை ஏந்தி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

கணியம்பாடி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள், மாணவா்களுடன் காலிக்குடங்களை ஏந்தி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன பாலம்பாக்கம், துத்திக்காடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் சமையல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் விலை கொடுத்து தண்ணீா் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.ாம். ஏற்கனவே மக்கள் நடத்திய தொடா் போராட்டத்தின் காரணமாக அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் கிணற்றிலும் தண்ணீா் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி பள்ளி மாணவா்களுடன் காலிக்குடங்களை ஏந்தி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்தனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். எனினும், தடையை மீறி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து அவா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து, தா்ணாவில் ஈடுபட்ட மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் இந்த சமரசப் பேச்சுவாா்த்தையை நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. ஆட்சியரை நேரில் சந்தித்து மட்டுமே எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம் எனக்கூறினா்.

பின்னா், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் நேரில் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.