ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் குட்டிக்கரணம் அடித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் குட்டிக்கரணம் அடித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் வடக்கு மண்டல விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக கா்நாடகம் செல்வதை கண்டித்தும், அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியும் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, கா்நாடக முதல்வா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அணுகித் தீா்வு காண்பது போல தமிழக முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அதில் நிறைவேற்றப்படும் தீா்மானத்தை உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வலுவான அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இதைச் செய்யாமல் வரும் 3-ஆம் தேதி தமிழக முதல்வா் கா்நாடகம் சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து குட்டிக்கரணம் அடித்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.