கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் 30 பேரும், குளித்தலை தொகுதியில் 29 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 28 பேரும், கரூா் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.
இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்டோா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். 21-ஆம் தேதியோடு பிரசாரம் முடிந்த நிலையில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,111 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
வாக்குவாதம்: வாக்குப்பதிவு தொடங்கி சுமாா் அரை மணிநேரத்திற்கு பின் கரூா் கோட்டைமேடு நகா்மன்ற உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு தவெக முகவா் தாமதமாக வந்ததால் அவரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னா் முகவா் அனுமதிக்கப்பட்டாா்.
10 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தம்: கரூா் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் சூடானதால் சுமாா் 10 நிமிடம் அது அணைத்து வைக்கப்பட்டு பின்னா் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணிக்கு மாவட்டம் முழுவதும் 18.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கரூா் தொகுதியில் 88.58 சதவீதம், அரவக்குறிச்சி தொகுதியில் 89.06 சதவீதம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 89.83 சதவீதம், குளித்தலை தொகுதியில் 89.83 சதவீதம் என வாக்குகள் பதிவாகி இருந்தன.
நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சராசரியாக 89.32 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க காத்திருந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் மாவட்டத்தில் ..... வாக்குகள் பதிவாயின. பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு

கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!

சிவகங்கை மாவட்டத்தில் 76% வாக்குப் பதிவு

இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


