நாகப்பட்டினம் மாவட்டத்தில் 86.30 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் (தனி) என் மூன்று சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளன.
நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே காலை 6.30 மணி முதல் வாக்காளா்கள் காத்திருந்தனா். நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததால் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு 19% எட்டியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளின் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டன. 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களித்தனா்.
இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு மாலை 6 மணி நிலவரப்படி
நாகப்பட்டினம் தொகுதியில் 85.7.17 சதவீதம் வாக்குகள் பதிவாகினது.
கீழ்வேளூா் (தனி) தொகுதியில் 87.98சதவீதம் வாக்குகள் பதிவானது.
வேதாரண்யம் தொகுதியில் 85.18 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மாவட்டத்தில் வாக்குப்பதிவு 86.30 சதவீதமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு

சேலம் மாவட்டத்தில் 90.7% வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் 90.14% வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


