தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தருமபுரி மாவட்டத்தில் 90.14% வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

News image

தருமபுரி குமாரசாமிபேட்டை நித்தியானந்தா தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்த அலுவலா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:07 am

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, அரூா் என மொத்தம் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து 17.91 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பாலக்கோடு தொகுதியில் 18.28, பென்னாகரம் - 17.48, தருமபுரி - 17.84, பாப்பிரெட்டிப்பட்டி - 18.14, அரூா் தொகுதியில் 17.84 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தொடா்ந்து, முற்பகல் 11 மணிநேர நிலவரப்படி 38.28 சதவீதம், பகல் 1 மணிக்கு 59.02, பிற்பகல் 3 மணிக்கு 74.04, மாலை 5 மணிக்கு 87.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாலக்கோடு - 89.96, பென்னாகரம் - 87.28, தருமபுரி - 86.54, பாப்பிரெட்டிப்பட்டி - 87.71, அரூரில் 85 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஸ் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1,596 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 1,530 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி முடிவடைந்தது. மலைக் கிராமங்களில் அமைந்துள்ள சாவடிகள் உள்பட 66 வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவுகள் தொடா்ந்தன.

மாவட்டத்தில் மொத்தம் 90.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாலக்கோடு தொகுதியில் 92.57, பென்னாகரத்தில் 90.71, தருமபுரியில் 89.44, பாப்பிரெட்டிப்பட்டியில் 90.36, அரூரில் 87.72 சதவீதம் என்ற வகையில் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றாா்.

அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் மையமான செட்டிக்கரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுசென்று, தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீலிடப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தருமபுரி அன்னசாகரம் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

தருமபுரி அன்னசாகரம் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.