அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இவா் புதன்கிழமை கோயம்பள்ளி, நெரூா், 16 கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். கோயம்பள்ளி கிராமத்தில் அவா் பேசுகையில், இப்பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் உயா்மட்டப் பாலப்பணிகள் முடிந்த நிலையில் அணுகுச் சாலை அமைப்பதில் மட்டும் சிக்கல் இருந்தது.
அதாவது அணுகுச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது சிலா் நிலம் வழங்காமல் நீதிமன்றத்திற்குச் சென்ால் அப்பணிகள் தாமதமானது. இப்போது அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டு விரைவில் அணுகுச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் முதல்வரால் பாலம் திறந்துவைக்கப்படும். எனவே இந்த ஆட்சி நிலைத்திட மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் உறுதி

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


