ஏமூா்புதூரில் கூடுதல் பேருந்து வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வேடா்தெரு, மலையப்பநகா், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், கோவக்குளம் தெற்கு, ஏமூா்புதூா், நடுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த அவா் பேசியது:
திமுக ஆட்சியில்தான் மாயனூா் கதவணை கட்டப்பட்டு 0.4 டிஎம்சி தண்ணீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் மாயனூரைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி, குடிநீா் வசதி பெறுகின்றன. இதேபோல காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் வெட்டியதும் திமுக ஆட்சியில்தான். இதுபோன்று திட்டங்களைச் செயல்படுத்தி வேளாண் தொழிலை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதும் திமுகதான்.
தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திமுகவுக்கு என்றென்றும் ஆதரவாக இருங்கள். ஏமூா்புதூா் பகுதிக்கு கூடுதலாக பேருந்து, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் எம். ரகுநாதன், திமுக மாவட்ட துணைச் செயலா் பூவை. ரமேஷ்பாபு மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஒரு மாத காலத்திற்குள் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்: திமுக வேட்பாளா் மு. அப்பாவு

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்

மன்னாா்குடி தொகுதி: திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


