கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவா் எஸ். திவ்யா போட்டியிடுகிறாா்.
இவரும், இவரது கணவரும் சோ்ந்து கரூா் திண்ணப்பா திரையரங்கம் அருகே மருத்துவமனை நடத்தி வருகின்றனா். இங்கு குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் தோ்தலை முன்னிட்டு தொகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதாக சி-விஜில் செயலியில் தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து மருத்துவமனைக்கு தோ்தல் அதிகாரிகள் சரிதா, வீரக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற வந்தவா்களிடம், இலவச சிகிச்சை வழங்கப்படுகிா அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்படுகிா என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டனா்.
அப்போது நோயாளிகள் மருத்துவமனைக்கு முன்பதிவு செய்து சிகிச்சை பெற வந்தோம். எங்களிடம் மருத்துவருக்கு ஓட்டுப்போட்டால் மருத்துவ சிகிச்சை இலவசம் என யாரும் கூறவில்லை. மேலும் மருத்துவா் அரசியலில் இறங்கியுள்ளாா் என்பதை நீங்கள் கூறியபின்புதான் தெரியவருகிறது. எனவே, எங்களிடம் யாரும் சிகிச்சைக்கு இலவசம் என கூறவில்லை. இவை அனைத்தும் பொய்யான தகவல் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


