அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துக் கொண்ட இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் வினோத் (22). இவா் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை இவா், தனது கையில் பிளேடை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த உடையாா்பாளையம் காவல்துறையினா், வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







