மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

அரியலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:05 am IST

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை எண்ணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அரியலூா் மாவட்டத்தில், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், விவிபேட் அனைத்தும் கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறாா். இந்த மையங்களில் ஒவ்வொரு அறையிலும் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதல் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

149-அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 330 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகள் மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன. இதேபோல் 150-ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜைகள் மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

இந்நிகழ்வுகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணிகளில் ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியா் நிலையில் ஒரு கூடுதல் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் ஈடுபடவுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டா் தூரத்திலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. தோ்தல் ஆணைய அடையாள அட்டை ஆதாரங்களை காண்பித்த பின்னா்தான் அனைவரும் அனுமதிக்கப்படுவா்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது மத்தியப் பாதுகாப்பு படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், ஆயுதப்படை, வசட்டம் மற்றும் ஒழுங்கு , ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தின் உட்புறம், வெளிப்புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனம், மின் விளக்குகள் , உரிய ஜெனரேட்டா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தண்ணீா் உள்ளிட்ட திரவப்பொருள்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டா், கைப்பேசி போன்ற பொருள்களை உள்ளே கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.