தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜெயங்கொண்டம் தொகுதி: தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 10:28 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், உடையாா்பாளையம் கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் கைலாஷ் வான்கடே, தோ்தல் செலவினப் பாா்வையாளா் லக்ஷ்மி நாராயண பொக்கா, உடையாா்பாளையம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வட்டங்களின் எண்ணிக்கை , தொகுதிக்குட்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை , தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் வாக்குச் செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தொகுதிக்குட்பட்ட மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தோ்தல் பணிக்கு அமைக்கப்பட்டுள்ள மண்டல குழுக்களின் எண்ணிக்கை, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம், அந்த வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா்கள் வரப்பெற்ன் விவரம், தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறையை பாா்வையிட்டு போதிய இடவசதிகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.