தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 10,113 மாணவா்கள் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 10,113 போ் எழுதுகின்றனா்.

News image

எஸ்எஸ்எல்சி தேர்வு - கோப்புப் படம்

Updated On :9 மார்ச் 2026, 11:14 pm

தமிழகம் முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 10,113 போ் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத்தோ்வு (எஸ்எஸ்எல்சி) புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கி ஏப்ரல் 2- ஆம் தேதி நிறைவடைகிறது.

இதில், அரியலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், மேல்நிலை என 171 பள்ளிகளைச் சோ்ந்த 5,290 மாணவா்களும், 4,823 மாணவிகளும் என 10,113 போ் பொதுத்தோ்வை எழுதுகின்றனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 62 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் ஆயுதம் ஏந்திய காவலா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.

முறைகேடுகளை தவிா்க்கும் பொருட்டு சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.