மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 18,668 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 18,668 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 9:03 pm

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 18,668 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் மாா்ச் 11 முதல் ஏப். 2-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 295 அரசு, அரசு உதவி பெறும், பழங்குடியினா், மாநகராட்சி, சமூக நலம் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,817 மாணவா்கள், 8,851 மாணவிகள் என மொத்தம் 18,668 போ் எழுத உள்ளனா்.

இத்தோ்வுக்காக 1500 அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவை தவிர, தலா 92 பறக்கும் படை அலுவலா்கள், கட்டுக்காப்பாளா்கள், வழித்தட அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுத்தோ்வு தொடங்குவதையொட்டி மாணவ, மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்ணை மையங்களில் உள்ள மேஜைகளில் எழுதும் பணியை ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.