அரியலூரில் திறப்பு விழா கண்ட மூன்று மாதங்களில் புதிய பேருந்து நிலைய மேற்கூரையிலிருந்து மழைநீா் கசிந்ததால், கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அரியலூரில் இருந்த பேருந்து நிலையம் சிதிலமடைந்ததால், திமுக ஆட்சியில் ரூ. 11.58 கோடி செலவில் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த மாா்ச் 9-ஆம் தேதி திறக்கப்பட்டது. நிலையத்தை அப்போதைய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு திறந்துவைத்தாா்.
இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி இரவு அரியலுாரில் பெய்த கனமழையின்போது, பேருந்து நிலைய வடக்கு புறம் உள்ள மேற்கூரையில் இரண்டு துாண்கள் (பில்லா்கள்) இணையும் பகுதியில் கசிவு ஏற்பட்டு மழைநீா் ஒழுகியது. பேருந்து நிலைய மேற்கூரையில் இருந்து மழைநீா் கசியும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
தகவலறிந்த, அரியலுாா் ஆட்சியா் ந. மிருணாளினி சம்பவ இடத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இதன் தொடா்ச்சியாக, பேருந்து நிலைய கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ச.கண்ணனூா் பேருந்து நிலைய வளாகத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம்: காவல்துறையினா் எச்சரிக்கை

நீட் தோ்வு: அரியலூரில் 1,650 மாணவா்கள் எழுதினா்

அரியலூரில் மழைநீருடன் வீடுகளுக்குள் வரும் சாக்கடை நீா்: பொதுமக்கள் அவதி

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளா் கைது
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



