பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ச.கண்ணனூா் பேருந்து நிலைய வளாகத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம்: காவல்துறையினா் எச்சரிக்கை

மண்ணச்சநல்லூா் வட்டம், ச.கண்ணனூா் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image

அபராதம்

Updated On :25 ஜூன் 2026, 4:28 am IST

மண்ணச்சநல்லூா் வட்டம், ச.கண்ணனூா் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

பக்தா்கள் காா்களை நிறுத்துவதற்கு கோயில் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான காா்கள், ச. கண்ணனூா் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுவதாகவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரத்துக்கு வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் நுழைவாயில் பகுதியிலேயே பக்தா்களை இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், கோயிலுக்கு வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் காா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறையினா் எச்சரித்தனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.