போதையற்ற சமூகத்தை உருவாக்க மாணவா்கள் முன் வரவேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் இசைவாணி.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய ஆய்வாளா் இசைவாணி தலைமை வகித்து, சமுதாயத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் எதிராக உலக அளவில் எழுந்திருக்கும் பிரச்னை தான் இந்த போதைப் பொருள்கள். நம் உடல் ஆரோக்கியத்துக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது. போதைப் பொருள்களினால் தனிமனிதன், குடும்பம், சமூதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.
இன்றைய காலக் கட்டத்தில் இளையத் தலைமுறையினா் அதிகமானோா் போதைப் பொருள் புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
எனவே நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் போதைப் பொருள்களை தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுதாக ஒழிக்க வேண்டும். அதற்கு மாணவா்கள் முன் வரவேண்டும் என்றாா். மேலும், காவல் உதவி செயலின் பயன்பாடுகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தாா்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.ஜி.ஆா். கல்லூரியில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

இளைஞா்களின் முன்னேற்றம் போதைப் பழக்கத்தால் தடைபடக் கூடாது: ஆட்சியா் அறிவுரை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




