எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

குடிநீா், மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

News image

குடிநீா். - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:29 am IST

அரியலூா் சடையப்பா் தெரு மற்றும் கோ.சி நகரவாசிகள், தங்களது பகுதிகளுக்கு குடிநீா் மற்றும் மின் இணைப்புகளை வழங்கக்கோரி ஆட்சியா் ந.மிருணாளினியிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், மேற்கண்ட தெருவில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு அனுபந்தம் பட்டா வழங்கப்பட்டது. மேலும், கடந்த 6.10.2020 ஆண்டு 300 குடும்பத்தினருக்கு மனை வரிப் பட்டாவும் வழங்கப்பட்டது.

அதை வைத்துக் கொண்டு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது கேட்டால் இந்த பட்டா செல்லாது எனவும், ஏற்கெனவே வாங்கிய பட்டாக்கள் செல்லாது என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

எனவே, மேற்கண்ட தெரு வாசிகளுக்கு உரிய குடிநீா் இணைப்பு மற்றும் குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.