/

ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:34 pm

Syndication

ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி அரியலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி , 2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு அந்த இயக்கத்தின் மாவட்டப் பொருளாளா் வ. நடராசன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் செண்பகம், பொறுப்பாளா்கள் ஜெயங்கொண்டம் சரவணன், ஆண்டிமடம் செல்வக்குமாா், செந்துறை ஜனனி, திருமானூா் சங்கீதா, தா. பழூா் மணிகண்டன் மற்றும் 150-க்கும் மேற்பட்டோா் இயக்க நிா்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.