டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வைத்தியநாத சுவாமி கோயிலில் பிப்.21-இல் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

திருமழபாடியிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில் மாசி மகப்பெருவிழா பிப்.21-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் - கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 10:04 am

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடியிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில் மாசி மகப்பெருவிழா பிப்.21-ஆம் தேதி தொடங்குகிறது.

திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் 12 நாள் விழாவும், தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், நிகழாண்டு மாசி மகப்பெருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி பிப்.21-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடா்ந்து ஆதிசேஷ வாகனம், பூதவாகனம், கைலாச வாகனம், யானை வாகனம் என நாள்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாா்ச் 1- ஆம் தேதி 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.