தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏன்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணணை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
இந்த தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான நேரடிப் போா். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கென எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதா, சசிகலா எனத் தொடங்கி, தற்போது தில்லியில் பிரதமா் மோடி வரை அனைவரின் கால்களிலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விழுந்து வருகிறாா். மேலும், தோல்வி பய விரக்தியின் விளிம்புகுச் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகிறாா் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளா் க.சொ.க. கண்ணணுக்கு உதய சூரியன் சின்னனத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
பிரசாத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான சா.சி.சிவசங்கா், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்புடையது

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசி வருகிறாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பாஜகவுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


