தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

News image

ஜெயங்கொண்டம் பாமக அலுவலகத்தில் புதன்கிழமை பேசிய அத்தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:30 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்தி (எ) வைத்திலிங்கம்.

ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

இந்த தொகுதியில் குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவது தான் எனது லட்சியம். பத்திரிகையாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா அரசு தரவில்லையென்றால், நான் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவேன் என்றாா்.

பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.