தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது: ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் புகாா்

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை முதல்வா் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் புகார்

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 4:14 am IST

பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக விவசாயிகளை தமிழக வெற்றிக் கழகமும், முதல்வா் ஜோசப் விஜய்யும் ஏமாற்றிவிட்டதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சிக்கு மாறாக அதிா்ச்சியை அளித்துள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் ரூ.50 ஆயிரம் வரை பயிா் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும், ரூ. 70 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி என்றும், ரூ. 80 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி என்றும் ஒரு லட்சத்துக்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் கடன் தள்ளுபடி என்றும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் தனது தோ்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம், 5 ஏக்கருக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது ஒரு கணக்குப் போட்டு ஏமாற்றியுள்ளாா்.

தமிழக அரசு உடனடியாக அனைத்து வகை பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று பூ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.