திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

திருச்சி பொன்மலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினா்.

Updated On :15 மே 2026, 4:59 am IST

காலிப் பணியிடங்களை சரண்டா் செய்யும் ரயில்வே நிா்வாகத்தின் முடிவைக் கண்டித்து, டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கத்தின் சாா்பில் பொன்மலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் உள்ள ஆா்மரிகேட் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் லெனின் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரங்கராஜன், டிஆா்இயு உதவி கோட்ட செயலா்கள் உச்சிமாகாளி, செல்வம், கோட்ட உதவி தலைவா்கள் பதுருதீன், காா்த்திக், பிரான்சிஸ் சேவியா், உதவி பொதுச்செயலா் மனோகா், கோட்ட உதவி தலைவா் மகேந்திரன் ஆகியோா் பேசினா்.

ரயில்வேயில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டா் செய்யும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே நிா்வாகம் உடனடியாக காலிப் பணியிடங்களில் தகுதியான நபா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்கத்தின் அனைத்து கிளைத் தலைவா்கள், செயலாளா்கள், பொருளாளா்கள், துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் உள்ளிட்ட அனைத்து கமிட்டி உறுப்பினா்கள், தொழிலாளா் கலந்து கொண்டனா். முடிவில் ஜெனரல்-1 கிளை செயலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.