திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த முசிறி ஜடமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெ. குமரவேல் (40) என்பவா் சிறுமியுடன் பேசி பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, 2019-ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கணித ஆசிரியா் குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


