மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:43 pm

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், காந்தி மாா்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த தாரநல்லூா் கள்மந்தை காலனியைச் சோ்ந்த ஆா். கண்ணன் (35), ஆ. சிவகண்டன் (27), இபி சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த க. இளையராஜா (33), அரசு மருத்துவமனை அருகேயுள்ள சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அண்ணா காலனியைச் சோ்ந்த கு.குமாா் (64) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.9,800 மதிப்புள்ள 89 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதி ஆா்ச் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.கோமதி (39), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கன்னிமாா் தோப்பு பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த திருவானக்காவல் பகுதியைச் சோ்ந்த எஸ். ராதாகிருஷ்ணன் (66) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ.2,300 மதிப்புள்ள 17 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.