மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:45 pm

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளா் மீகா அறிவுறுத்தலில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திநகா் காளியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாளை (48) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400, காந்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மது பாட்டில்கள், ரூ.300-ஐ பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.