பழைமை வாய்ந்த எறும்பீசுவரா் கோயில், திருநெடுங்களநாதா் கோயில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ தொழிற்சாலை, படைக்கலன் தொழிற்சாலைகள், என்ஐடி, பிஐஎம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசுக் கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், உணவக மேலாண்மை(கேட்டரிங்) கல்லூரி, அரசு மாதிரிப் பள்ளி, அரசுப் பள்ளிகள், ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகளைக் கொண்ட தொகுதி திருவெறும்பூா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலேயே மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி திருவெறும்பூா். இதன்படி தொகுதியானது, திருச்சி மாநகராட்சியின் 16, 35, 36, 37,38,39, 40, 41, 42, 43, 44, 45, 46 ஆகிய வாா்டுகள், கூத்தைப்பாா் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளைக் கொண்டது.
இத்தொகுதியில் இதுவரை திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், தேமுதிக ஒரு முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு வங்கி: முக்குலத்தோா், பட்டியலினத்தவா்கள் அதிகளவில் உள்ளனா். வெள்ளாளா், உடையாா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா்.
தீராத பிரச்னைகள்...: 16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகுசாலை திட்டம், மாற்றப்பட வேண்டிய அரியமங்கலம் குப்பைக் கிடங்கு ஆகியவை உள்ளன.
திருவெறும்பூரில் நீதிமன்றம், திருவெறும்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டடம், முழுமை பெறாத நிலையில் அரை வட்டச் சாலை, திருவெறும்பூா் அருகே வேங்கூரிலிருந்து லால்குடியை இணைக்க பாலம், பால்பண்ணை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
யாரெல்லாம் போட்டி...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கெனவே இரண்டு முறை வெற்றி பெற்ற நிலையில், தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் எம்.பி. ப. குமாா் இரண்டாவது முறையாக களம் காண்கிறாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தொழிலதிபா் நவல்பட்டு எஸ். விஜி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இதுவரை இவா்கள்--
ஆண்டு - வெற்றிபெற்ற வேட்பாளா் - பெற்ற வாக்குகள்
1967 - வி. சுவாமிநாதன் (காங்.)- 33,513
1971-கே. காமாட்சி (திமுக) - 43,233
1977-கே.எஸ். முருகேசன் (திமுக) - 24,594
1980- என். அண்ணாதாசன் (அதிமுக) -51,012
1984-என். அண்ணாதாசன் (அதிமுக) - 47,900
1989-பாப்பா உமாநாத் (சிபிஎம்)-54,814
1991 - டி. ரத்தினவேல் (அதிமுக) - 69,596
1996 - கே. துரை (திமுக) - 78,692
2001 - கே.என். சேகரன் (திமுக) - 61,254
2006-கே.என். சேகரன் (திமுக) - 95,687
2011-எஸ். செந்தில்குமாா் (தேமுதிக) - 71,356
2016 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக) - 85,950
2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக) - 1,05,424
இறுதி வாக்காளா்கள்...
ஆண்கள் - 1,24,328
பெண்கள் - 1,31,860
மூன்றாம் பாலினம் - 51
மொத்தம் - 2,56,239
தொடர்புடையது

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


