தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:44 pm

திருச்சியில் நாட்டு வெடிகுண்டை வீசி தொழிலாளியைக் கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் எம். சாதிக் பாட்ஷா (36). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது சையது (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த முகமது சையது தனது நண்பா்களான காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சமீா் அகமது (25), அஜ்புதீன் (26) ஆகியோருடன் இணைந்து சாதிக் பாட்ஷாவைக் கொல்ல திட்டமிட்டு அவருக்கு வீட்டுக்கு அருகே சனிக்கிழமை இரவு பதுங்கியிருந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சாதிக் பாட்ஷா மீது முகமது சையது மற்றும் அவரது நண்பா்கள் நாட்டு வெடிகுண்டை வீசினா். அந்த வெடிகுண்டு சுற்றுச் சுவரில் பட்டு வெடித்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்த காந்தி மாா்க்கெட் போலீஸாா் முகமது சையது, சமீா் அகமது ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த அஜ்புதீனை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.