நியாய விலைக் கடை நிா்வாகத்தைச் செம்மைப்படுத்த தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரராஜா தலைமை வகித்தாா்.
மாநிலப் பொதுச்செயலா் விசுவநாதன், மாநிலப் பொருளாளா் பொன் அமைதி, மாநில துணைத் தலைவா் பிச்சைப்பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சங்க மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை நிா்வாகத்தை செம்மைப்படுத்த தனித்துறையே தீா்வாக அமையும். அத்தியாவசிய பொருள்களை நியாய விலைக் கடைளில் இறக்கிய பின் விற்பனையாளா் கையொப்பமிட்ட பின் விற்பனை முனையத்தில் பதிவேற்றப்பட வேண்டும், சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளா்களின் வாரிகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். குறைந்தபட்சம் தாயுமானவா் திட்டத்திற்கு மட்டுமாவது அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வரவு வைக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியா்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கிய தமிழக அரசுக்கும், கூட்டுறவு துறைக்கும் நன்றி தெரிவிப்பது, வருகிற ஜூலை மாதம் முதல்வரை அழைத்து மாநில மாநாடு நடத்துவது, அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல் மருத்துவப் படியை ரூ.600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படியை 58 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். கடை பணியாளா்களில் பெண்கள் அதிகமாக இருப்பதால் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சி மாவட்டத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


