லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

திருச்சியிலுள்ள தந்தை பெரியாா் கலை அறிவியல் கல்லுரி முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்

Updated On :5 மார்ச் 2026, 10:45 pm

ஈரான் மீது போா் தொடுத்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தந்தை பெரியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். இதில், ஈரான் மீது தொடுத்துள்ள போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் மாநகரச் செயலா் சூா்யா, மாவட்ட துணைச் செயலா்கள் சுதேசனா, சா்மி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.