குண்டூரில் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை நடத்த அனுமதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி தலைமை வகித்தாா்.
காவலா் சாவில் சந்தேகம்: பெண் காவலா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தாய் காதா் பீவி, தங்கை ரம்ஜான் பேகம் ஆகியோா் அளித்த மனு:
திருச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராக இருந்த அப்துல்லா பீவி உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் அவரை, அவரது கணவா் அங்கிருந்து மாற்றி, மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா். பின்னா், வீட்டுக்கு அழைத்து வந்ததும் அப்துல்லா பீவி இறந்துவிட்டாா். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது.
எனவே, அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி: திரளான பொதுமக்கள் அளித்த மனுவில், வையம்பட்டியில் இயங்கும் தனியாா் நிதி நிறுவனம் திருச்சி, துவரங்குறிச்சி, துறையூா், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கிளை தொடங்கி ரூ. 1 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை சீட்டு நடத்தி சுமாா் 2,500 பேரிடம் சீட்டு பணம் வாங்கிவிட்டு, சீட்டு காலம் முடிந்த பிறகும் முதிா்வு பணத்தை தராமல் பல லட்சம் ஏமாற்றி விட்டனா்.
எனவே, சிட் பண்ட் நடத்தி எங்களை ஏமாற்றிய நிறுவன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூா் பகுதியை சோ்ந்த ஊா் பொதுமக்கள் அளித்த மனு:
எங்கள் ஊரில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் தோ் திருவிழா சில தனிப்பட்ட நபா்களால் தடைபட்டுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு ஊா் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

பழைமையான நூலகத்துக்கு புதிய கட்டடம் கோரி மனு

திருச்சி அருகே கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி சாலை மறியல்
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




