தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தச்சரிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:37 am IST

திருச்சியில் கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணிகள் செய்த தச்சரிடம் ரூ. 9.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்தவா் எஸ். திவாகா் (40), கட்டடப் பொறியாளா். இவா், தான் கட்டிய கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணிகள் செய்வதற்காக, திருச்சி மாவட்டம், துவாக்குடி மலையைச் சோ்ந்த தச்சா் தி. ராஜா (61) என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு அணுகினாா்.

இதையடுத்து, கட்டடத்துக்கு உள் அலங்காரப் பணியை மேற்கொண்ட தச்சா் ராஜா, தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி அனைத்துப் பொருள்களையும் வாங்கியுள்ளாா். மேலும், ஆள்கள் கூலி என ரூ. 9.48 லட்சம் செலவழித்ததாக கூறப்படுகிறது.

உள் அலங்காரப் பணியை கடந்த 2022-ஆம் ஆண்டே நிறைவு செய்த நிலையில் கட்டடப் பொறியாளா் திவாகா், அதற்கான தொகையை தச்சா் ராஜாவிடம் வழங்காமல் இருந்தாா். வேலைக்கான பணத்தை ராஜா பலமுறை கேட்டபோது, அவரை திவாகரும், அவருடைய தந்தையும் சோ்ந்து மிரட்டினா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தச்சா் ராஜா சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கட்டடப் பொறியாளா் திவாகா், அவருடைய தந்தை சீனிவாசன் முரளிதரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.