இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சியில் வேலைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஆா். ஜாபா்லா (30), இவா், திங்கள்கிழமை காலை வேலைக்குச் செல்ல அரியமங்கலம் எஸ்ஐடி சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்த இளைஞா்கள் இருவா் மது அருந்த ஜாபா்லாலிடம் பணம் கேட்டனா். அவா் தர மறுக்கவே, ஜாபா்லாலை தாக்கிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டு அவரிடமிருந்த இருந்த ரூ.1000ஐ பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஜாபா்லா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் பணம் பறித்தது பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த சகோதரா்களான வி. ஹரிகிருஷ்ணன் (19), வி. சக்திவேல் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் அன்று பிற்பகல் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.