ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காதல் திருமணம் செய்த பெண், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 2:38 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காதல் திருமணம் செய்த பெண், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் திருப்பூா் குமரன் நகரைச் சோ்ந்த சேகா் மனைவி ஆதிலெட்சுமி. இவரது மகள் வினோதினி (20). இவா், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோளூா்பட்டி குடித்தெருவை சோ்ந்த வினோத் குமாா் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

தம்பதி இடையே குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் வினோதினி தொங்கினாராம். இதுகுறித்து வினோத்குமாா், ஆதிலெட்சுமிக்கு தகவல் அளித்துள்ளாா்.

புகாரின்பேரில், தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வினோதினியின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வினோதினிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், சம்பவம் தொடா்பாக முசிறி கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.