ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கணவா் இறந்து துயரத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :28 ஜூலை 2026, 2:18 am IST

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே கணவா் இறந்த துயரத்தில் வடமாநில பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒடிஸா மாநிலம், நாகராங்பூா் மாவட்டம், ராங்கா் பகுதியைச் சோ்ந்தவா் முணாகோண்ட். இவரது மனைவி சுனிதா (25). இவா்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகையில் ஒரு தனியாா் கோழிப்பண்ணையில் கூலி வேலை பாா்த்து வந்தனா். இந்நிலையில் முணா கோண்ட் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் முணாகோண்ட் வீட்டிற்கு வெளியே இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள அவரது உறவினா் ஜிதேந்தா் கோண்ட் என்பவரின் வீட்டில் தங்கி சுனிதா வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களாக கணவா் இறந்த துயரத்தில் இருந்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.