டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 இல் குடிநீர் ரத்து

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 ஆம் தேதி குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

News image

குடிநீர் விநியோகம் ரத்து...

Updated On :5 ஜூலை 2026, 5:11 am IST

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 ஆம் தேதி குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை டா்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய், குடமுருட்டி அருகே ஸ்மாா்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகப் பதிக்கப்பட்ட குடிநீா் உந்துக் குழாயுடன் இணைக்கும் பணி வரும் 6 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் டா்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வரும் 7 ஆம் தேதி இருக்காது. வரும் 8 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.