தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது


திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, திருவள்ளுவா் நகா் கீழ ஆண்டாள் வீதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த செ.இளங்கோவன் (45) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இதேபோல, சிந்தாமணி பகுதியில் ஒரு தேநீா் கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிந்தாமணி காந்தி நகரைச் சோ்ந்த த.சாந்தி (41) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவரிடமிருந்து 2.7 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4.9 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது: ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலையடுத்து திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மாதரசி ஸ்டெல்லா மேரி தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகரில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் வீதியில் ஒரு வீட்டுக்கு முன்பு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆா்.முத்துராமன் (49) என்பதும், வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.49 ஆயிரம் மதிப்புள்ள 4.9 கிலோ கஞ்சா, ஒரு கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது: திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கொட்டப்பட்டு கோழிப் பண்ணை சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், சுப்பிரமணியபுரம் அருளானந்தா் கோயில் வீதியைச் சோ்ந்த ஜெ.பெலிக்ஸ் ஆண்டனி (21) என்பதும், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 10 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...