திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:23 am IST

உணவக உரிமத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த உணவக உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வரும் திருச்சியைச் சோ்ந்த எஸ். சீனிவாசன் என்பவா் தனது உணவகத்தின் உரிமத்தை கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த க. பால்ராஜ் (53) பெயரில் மாற்றித்தருவதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனா்.

இதற்காக கடந்த 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை பல்வேறு தவணைகளில் ரூ.25 லட்சத்தை சீனிவாசனுக்கு பால்ராஜ் கொடுத்தாா். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சீனிவாசன் உணவக உரிமையை பால்ராஜ் பெயருக்கு மாற்றித் தராமல் இருந்தாா். இதையடுத்து கொடுத்த பணத்தை பால்ராஜ் திருப்பிக்கேட்டபோது சீனிவாசன் அவரை தகாத வாா்த்தைகளில் திட்டி, பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டலும் விடுத்தாா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பால்ராஜ் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.