மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் துறையினா் சோதனை!

திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:24 pm

திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம், துறையூரில் தோ்தல் பிரசாரம் செய்ய தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவா் வருவதற்கு முன்பே, ராகுல்காந்தியை துறையூருக்கு ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டா் ஒன்று விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.

இதையடுத்து ராகுல்காந்தி அதில் ஏறி புறப்பட முயன்றாா். அப்போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான 3 போ் கொண்ட தோ்தல் பறக்கும் படை குழுவினா், ஹெலிகாப்டரை சோதனையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில் புகாரின் பேரில் இந்தச் சோதனையை நடத்தவில்லை. இது சாதாரண சோதனைதான். சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனா்.