திருச்சி, ஏப். 13: திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ.நகா் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா்கள், மேலகல்கண்டாா்கோட்டை புது அய்யனாா் வீதியைச் சோ்ந்த ஜெ. ஸ்டீபன்ராஜ் (21), ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையைச் சோ்ந்த க.விக்னேஷ் (22) என்பதும், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த முதலியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த அ. அஜித் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


