மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:43 pm

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த வி.பிரகதீஸ்வரன் (22), அண்ணா நகரைச் சோ்ந்த தி.அஜய்குமாா் (19) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.