ஹெலிகாப்டர் போக்குவரத்து கண்காணிக்கப்படுமா?
காரைக்கால், ஜூன் 20: காரைக்காலில் தற்போது அதிகரித்துள்ள ஹெலிகாப்டர் போக்குவரத்தை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். புதுவை யூனியன் பிரதேசத்தில் 2-வது ப


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
காரைக்கால், ஜூன் 20: காரைக்காலில் தற்போது அதிகரித்துள்ள ஹெலிகாப்டர் போக்குவரத்தை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் 2-வது பெரிய பிராந்தியம் காரைக்கால். பொருளாதாரம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் காரைக்கால் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இதனால், இங்கு வந்து செல்ல தொழிலதிபர்கள், தணிக்கையாளர்கள் போன்றோர் ஹெலிகாப்டரைத் தற்போது அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில் சேவை இல்லாதிருந்த காரைக்காலில் இப்போது நாகூர் முதல் காரைக்கால் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று, ரயில் சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. விரைவில் ரயில் சேவை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்காலில் தனியார் கப்பல் துறைமுகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்தப் பகுதியில் வெளிநாட்டினர் ஊடுருவுவதைக் கண்காணிக்க குடியேற்றப் பிரிவு அலுவலகத்தை மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் முன்பு ஒரு முறை கேட்டபோது, இது பயணிகள் துறைமுகம் இல்லை என்று கூறினார்.
ஆனால், இங்கு வரும் கப்பலில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்கள், இந்தத் துறைமுகத்தின் வழியாக எவ்விதச் சோதனையும் இன்றி துறைமுகத்தை விட்டு வெளியேறி, நகருக்குள் சென்று திரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காரைக்காலில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பல தொழில்சாலைகளில் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அரசு அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்தாலும், ஹெலிகாப்டரில் வந்து செல்வோர் குறித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கோ, காவல் துறைக்கோ தெரிவதில்லை.
காரைக்காலில் ஹெலிகாப்டர் போக்குவரத்து தொடர்ந்து இருந்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் எங்கிருந்து வருகிறது, காரைக்காலில் எந்த நிறுவனத்தின் தளத்தில் இறங்குகிறது, இதில் வந்தவர்கள் யார் என்ற எந்த விவரமும் அரசு நிர்வாகங்களுக்கு தெரிவதில்லை.
ஹெலிகாப்டர் போக்குவரத்தில் உள்ள நெறிமுறைகள் இங்கு பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் லாஸ்பேட் பகுதியில் ஏர் டிராபிக் கன்ட்ரோல் அமைப்பு செயல்படுகிறதாம். இந்த மையத்தின் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் இந்த பிராந்தியத்திற்கு வந்து செல்ல முடியாதாம். ஆனால், காரைக்காலில் இந்த நிலை இல்லை.
காரைக்காலில் விமான தளம் அமைக்க 600 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விமான நிலையம் அமைக்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
காரைக்காலுக்கு கப்பல் வருவதும், விமானங்கள் வருவதும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என ஆட்சியாளர்கள் பெருமை பேசிக்கொண்டிருப்பதை விட, தீவிரவாதச் செயல்கள் பெருகி வரும் இன்றைய நிலையில், காரைக்காலில் தற்போதே பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...