நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சி மாநகராட்சி: பெரும்பான்மையைப் பிடிக்குமா அதிமுக?

திருச்சி, அக். 16: திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் 27 இடங்களில் வென்ற திமுகவும், 9 இடங்களில் வென்ற அதிமுகவும் இந்த முறை பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் பிரசாரத்தை முடித்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:50 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, அக். 16: திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் 27 இடங்களில் வென்ற திமுகவும், 9 இடங்களில் வென்ற அதிமுகவும் இந்த முறை பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் பிரசாரத்தை முடித்திருக்கின்றன. திங்கள்கிழமை விழும் வாக்குகள்தான் இதைத் தீர்மானிக்க உள்ளன.

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் திருவெறும்பூர் பகுதிகள் இணைப்புக்குப் பிறகு, தற்போதைய வார்டுகளின் எண்ணிக்கை 65. கடந்த மாமன்றத்தின் வார்டுகள் எண்ணிக்கை 60.

இந்த 60 வார்டுகளில் 27 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும், 9 இடங்களை காங்கிரஸýம், 4 இடங்களை மதிமுகவும், 3 இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 2 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஓர் இடத்தை தேமுதிகவும் வைத்துள்ளன. மீதமுள்ள 5 பேர் சுயேச்சைகள்.

கட்சி வாரியாகப் போட்டி:  தற்போது 65 வார்டுகளுக்காக மொத்தம் 573 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் கட்சி வாரியாக எண்ணிக்கை: திமுக- 61, அதிமுக- 65, காங்கிரஸ்- 65, மதிமுக- 45, தேமுதிக- 52, இந்திய கம்யூ.- 5, மார்க்சிஸ்ட்- 13, பாஜக- 35, விடுதலைச் சிறுத்தைகள்- 17, புதிய தமிழகம்- 9, மமக- 4, முஸ்லிம் லீக்- 3.

மீண்டும் வாய்ப்பு:  திமுகவில் கே. வேலு (13-வது வார்டு), ஜி. கலாராணி (17-வது வார்டு), ஜி. சத்தியமூர்த்தி (18-வது வார்டு), எம். மலர்க்கொடி (15-வது வார்டு), வி. லீலா (26-வது வார்டு), தி. ஜெயபாரதி (33-வது வார்டு), மு. அன்பழகன் (32-வது வார்டு), ஆர்.சி. கணேசன் (35-வது வார்டு), பி. உஷாராணி (36-வது வார்டு), எஸ். பாலமுருகன் (43-வது வார்டு), செ. கவிதா (41-வது வார்டு), தி.மு. ரங்கா (41-வது வார்டு), தி. திருநாவுக்கரசு (58-வது வார்டு), ரெ. அறிவுடைநம்பி (59-வது வார்டு) ஆகிய 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

32-வது வார்டில் போட்டியிடும் துணை மேயர் மு. அன்பழகன் ஏற்கெனவே 47-வது வார்டில் வென்றவர். தற்போது வார்டு மாறியிருக்கிறார்.

அதிமுகவில் அ. நத்தர்ஷா (12-வது வார்டு), பி. கிருஷ்ணமூர்த்தி (14-வது வார்டு), சு. தில்ஷாத்பேகம் (20-வது வார்டு), ஜெ. சீனிவாசன் (24-வது வார்டு), எஸ். கயல்விழி (29-வது வார்டு), ஆர். வனிதா (57-வது வார்டு) ஆகிய 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிகவில் அ. ஜோசப் ஜெரால்டு 4-வது முறையாக 45-வது வார்டில் களம் காண்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 39-வது வார்டில் க. தங்கராஜுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மதிமுகவில் தி. ராமமூர்த்தி (46-வது வார்டு), பி. விஜயலட்சுமி (4-வது வார்டு), எம். முகம்மது முஸ்தபா (19-வது வார்டு) ஆகியோருக்கும், காங்கிரஸ் கட்சியில் எஸ். காளீஸ்வரன் (37-வது வார்டு), ஆர். ஹேமா (44-வது வார்டு) ஆகியோருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உறவினர்கள் போட்டி: 56-வது வார்டு (திமுக) பெண்களுக்கானதாக மாறிவிட்டதை அடுத்து இங்கு வென்ற சி. கண்ணனின் மனைவியும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான விஜயலட்சுமி திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

30-வது வார்டு (அதிமுக) பொது வார்டாக மாறிவிட்டதை அடுத்து, இங்கு போட்டியிட்டு வென்ற இளஞ்சியத்தின் மகன் பாஸ்கர் தற்போது அதிமுக வேட்பாளராகக் களத்தில் உள்ளார்.

27-வது வார்டில் (அதிமுக) போட்டியிட்டு வென்றவர் மறைந்த என். மரியம்பிச்சை. தற்போது இந்த வார்டில் அவரது மகன் ஆசிக் மீராவுக்கு அதிமுக தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக பெரும்பான்மையைப் பெறும் கட்சிதான் முடிவெடுக்கும் கட்சியாக இருக்கும். மேயர் ஒரு கட்சியாக இருந்து, மாமன்றத்தின் பெரும்பான்மை இன்னொரு கட்சியாக இருந்தால் மாநகராட்சித் தீர்மானங்களின் கதி அதோகதிதான்!

தொடர்ந்து காங்கிரஸ் மேயர்கள் இருந்தவரை, திமுகவின் ஆதரவுடன் மாமன்றம் நடந்து வந்திருக்கிறது- அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோதும்கூட. இப்போது அந்தக் கூட்டணியும் இல்லை. எனவே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பிடிப்பது முக்கியமானதாக இருக்கிறது. இதற்கான முயற்சியில் அதிமுக, திமுக மட்டுமல்ல, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வழக்கம்போல சுயேச்சைகளை வளைக்கும் முயற்சியும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.