நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சி-​ பாலக்காடு பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

திருச்சி டிச. 29: திருச்சி- பாலக்காடு இடையேயான பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு,

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:49 pm

தி. இன்பராஜ்

திருச்சி டிச. 29: திருச்சி- பாலக்காடு இடையேயான பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு வரை தற்போது பயணிகள் ரயில் (வண்டி எண். 888) இயக்கப்பட்டு வருகிறது. இதே போல, எதிர் மார்க்கத்தில் (வண்டி எண். 887) பாலக்காடு நகரத்தில் இருந்து திருச்சி வரையும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தற்போது 10 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. ஆனால், வேலை நாள்கள் மட்டுமன்றி தினமும் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளதால், போதிய இடவசதியின்றி பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சியில் இருந்து பிற்பகல் ஒரு மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 8.40 மணிக்கு பாலக்காட்டை சென்றடைகிறது. எதிர் மார்க்கத்தில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.45 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

பாலக்காட்டில் இருந்து திருச்சி வரும்போது, காலை நேரம் என்பதால், கரூர் வரை இந்த ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. சில சமயங்களில் படிக்கட்டில் தொங்கியபடியே மக்கள் பயணிக்கும் நிலையும் உள்ளது.

மேலுமó, வேலைக்குச் செல்வோரைத் தவிர, வியாபாரம் தொடர்பாக திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்த ரயிலின் பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

இந்தப் பயணிகள் ரயிலில் சிறப்பம்சம் என்னவென்றால் எங்கிருந்து புறப்படுகிறதோ, அந்த ஊரிலேயே அனைத்துப் பெட்டிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பிவிடும். இதனால், மற்ற பகுதி மக்கள் நின்று கொண்டே செல்லும் அவல நிலையே நீடித்து வருகிறது.

மேலும், சில இடங்களில் ஏறும்போது இடமில்லாததால், பயணச் சீட்டை திரும்பக் கொடுத்துவிட்டு மக்கள் பேருந்தில் செல்லும் நிலையும் இருந்து வருகிறது.

மக்களின் இந்தப் பாதிப்பு குறித்து பல்வேறு சமூக அமைப்புகள் ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்த ரயிலில் பயன்படுத்தப்படும் என்ஜின் 15 பெட்டிகள் வரை இழுவைத் திறன் கொண்டது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, பாதிக்கப்படும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைத்தால், ரயில்வே நிர்வாகத்துக்கு வருமானம் அதிகரிப்பதோடு, மக்களும் அவதியில்லாமல் பயணிக்கும் நிலை உருவாகும்.

இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "இந்த பிரச்னை பற்றி ஆலோசனை நடத்தி விரைவில் நல்ல தீர்வு காணப்படும்' என்றனர்.

ஆனால், ஆலோசனை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்காமல் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு, கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கினால், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்பது பாதிக்கப்பட்ட பயணிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.