கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்

Updated On :

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நீலகண்டன் தலைமையிலான போலீஸாா் பாண்டவா்மங்கலம் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல பாண்டவா்மங்கலம் கண்மாய் கரை அருகே கையில் பையுடன் நின்ற இளைஞரைப் பிடித்து, பையை சோதனையிட்டனா். அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா் பாரதி நகா், முதல் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கற்பக மூா்த்தி (28) என்பது தெரிய வந்தது. போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.