கைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது பற்றி...

CM Vijay inspects Chembarambakkam Lake

முதல்வர் விஜய் - X

Updated On :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று (அக். 26) ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் இன்று வருகை தந்தார். அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் நீர் இருப்பு, கொள்ளளவு, மழை வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும் ஏரியின் 5 கண், 19 கண் மதகுகள் பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார்.

ஏரிக்கு தற்போது நீர்வரத்து 150 கனஅடியாக உள்ள நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 14.88 அடியாக உள்ளது.

Summary

CM Vijay inspects Chembarambakkam Lake

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.